பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒப்புரவு அறிதல் |உலக நடையினை அறிந்து பிறர்க்குப் பயன்பட்டு வாழ்தலாகும்)

1. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றும் கொல்லோ உலகு. (ப-ரை) மாரிமாட்டு - நீர் தருகின்ற மேகங்களுக்கு: உலகு - உலகில் உள்ள உயிர் வாழ்வன என்-என்ன, கைம்மாறு - பதில் உதவி, ஆற்றும் செய்கின்றன, | அதுபோல) கடப்பாடு - மேகங்கள் போன்ற பெரிய வர்கள் செய்யும் நன்மைகளும், கைம்மாறு வேண்டா . தி நம்பப் பெறும் உதவிகளை வேண்டிச் செய்யப்படுவன அல்ல (கொல்லோ - அசைநிலை)

|க-ரை) தமக்கு நீரைத் தருகின்ற மேகங்களுக்கு உயிர்கள் என்ன கைம்மாறு (பதில் உதவி) செய்கின்றன 7 அதுபோல் மேகங்கள் போன்ற பெரியவர்கள் செய்கின்ற ஒப்புரவுகளும் கைம்மாறு எதிர்பார்ப்பன அல்ல.

2. தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு. (ப-ரை) தக்கார்க்கு - தகுதியுடைய பெரியவர்களுக்கு, தாஸ் - முயற்சியினை, ஆற்றி - செய்து, தந்த பொருளெல், லாம் - ஈட்டிய பொருள் எல்லாம், வேளாண்மை. ஒப்புரவு, (உதவி செய்தற் பொருட்டு செய்வதற்கேயாகும்.

(க-ரை தகுதியுடைய பெரியவர்களுக்கு, முயற்சி செய்து சட்டிய பொருளெல்லாம் ஒப்புரவு (உதவி) செய் வதற்கேயாகும். -

3. புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே

ஒப்புரவின் கல்ல பிற, (ப-ரை புத்தேள் - தேவர்கள் இருக்கும், உலகத்தும் . உலகத்திலும், ஈண்டும் - இந்த உலகத்திலும், ஒப்புரவின் -