பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

(கரை) புகழுடம்பிற்குப் பெருக்கமாகும் கெடுதியும், அப்புகழுடம்பு நிலைத்து நிற்பதற்கு இறத்தலும், சிறந்த பல்கலைத் திறமையுடையவர்களுக்கு அல்லாமல் மற்றை யோருக்கு முடியாததாகும்.

6. தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்

தோன்றலின் தோன்றாமை கன்று.

(ப.ரை தோன்றின் - மக்களாகப் பிறந்தால் புகழொடு - புகழடைவதற்கேற்ற குனங்களுடன், தோன்று க - பிறத்தல் வேண்டும், அஃது . அவ்வாறு, இலார் - அத்தன்மை இல்லாதவர்கள், தோன்றவின்-மனித ராய்ப் பிறத்தலைவிட, தோன்றாமை நன்று - பிறவா. திருத்தலே நல்லதாகும். (விலங்காய்ப் பிறத்தல் நன்று.)

(க-ரை) மக்களாகப் பிறத்தல் புகழுண்டாவதற்கான குணங்களோடு பிறத்தல் வேண்டும். அக்குணம் இல்லா தவர்கள் மக்களாகப் பிறப்பதைவிடப் பிறவாதிருத்தலே நல்லதாகும்.

7. புகழ்பட வாழாதார் தம்கோவார் தம்மை

இகழ்வாரை கோவது எவன். (ப-ரை) புகழ் தமக்குப் பகழ் பட - உண்டாகும் படியாக, வாழாதார் . வாழ முயற்சிக்காதவர்கள், தம் நோவார் - தம்மையே நொந்து கொள்ளாமல், தம்மை. தங்களை, இகழ்வாரை இகழ்பவரிகளை, நோவது எவன். நொந்து கொள்வது எதனைக் கருதி'

|க-ரை) தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாத வர்கள் அதுபற்றிப் பிறர் இகழும்போது, அவ்வாறு இகழ்பவர்கள் மீது வருத்தப்படுதல் ஏனோ?

8. வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும்

எச்சம் பெறாஅ விடின். |ப-ரை) இசை - புகழ், என்னும் என்று கூறப்படு: கின்ற, எச்சம் - எஞ்சி நிற்பதாகிய எச்சத்தினை, பெறா