பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

அறம் அருளேயாகும். பல வகைப்பட்ட நெறிகளில் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே அன்றிப் பிறிது இல்லை. - -

3. அருள்சேர்ந்த கெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல். (ப-ரை) இருள் சேர்ந்த இருள் மயமான, இன்னாதுன்பமான, உலகம் - உலகத்தில், புகல்-போய்ச்சேர்தல் அருள் சேர்ந்த - அருளினைக் கொண்ட, நெஞ்சி னார்க்கு - நெஞ்சினையுடைய பெரியோர்களுக்கு-இல்லை, இல்லையாகும். -

(க-ரை) இருள் நிறைந்த துன்ப உலகத்தில் சென்று புகுதல் என்பது அருள் நிறைந்த நெஞ்சினையுடையவர் களுக்கு இல்லை.

4. மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல்ளன்ப

தன்.உயிர் அஞ்சும் வினை. (ப-ரை) மன் - நிலைத்து நிற்பதாகிய, உயிரிை உயிர்கனை, ஒம்பி - பாதுகாத்து, அருள் ஆள்வார்க்கு. அருளினை மேற்கொண்டவர்களுக்கு, தன் - தன்னுடைய, உயிர் . உயிர், அஞ்சும் - அஞ்சுவதற்குக் காரணமானது வினை தீமையான வினைகள், இல் என்ப - உண்டாகாது (சேராது) என்று அறிந்தோர் கூறுவர்.

(க-ரை) நிலையான உயிர்களைப் போற்றி அவற்றி னிடம் அருளுடையவனுக்குத் தன் உயிர் அஞ்சக் கூடிய தீவினைகள் உண்டாகா என்று அறிந்தோர் சொல்லுவர்.

5. அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்

மல்லல்மா ஞாலம் கரி. (ப-ரை அருள் ஆள்வார்க்கு - அருளினைக் கொண்ட மேலானவர்களுக்கு, அல்லல் - துன்பமானது, இல்லை . உண்டாவதில்லை, (அந்த உண்மைக்கு) வளி - காற்று, வழங்கும் - உலவுகின்ற, மல்லல் - வளப்பம் நிறைந்த,