பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

தன்னைவிட, வலிமையுடையவர்கள் தன்னை நவியச் செய்ய வரும்போது, தான் அஞ்சி நிற்பதை நினைத்தல் வேண்டும்.

26. புலால் மறுத்தல்

[அருள் உடையவர்களுக்குப் பொருந்தாத செயலாகும்கொலைப் பாவத்திற்குக் காரணமானது; 1. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன் உண்பான்

எங்ங்னம் ஆளும் அருள். (ப-ரை) தன் - தன்னுடைய, ஊன் - உடம்பினை, பெருக்கற்கு - பெரிதாக வளர்ப்பதற்காக, தான் - தான், பிறிது - மற்றொன்றின், ஊன் - உடம்பினை, உண்பான் - உண்பவன், எங்ங்ணம் - எவ்வாறு, அருள் ஆளும் - அருளினை நடத்துவான்: (நடத்த மாட்டான்.)

(க-ரை) தன்னுடைய உடம்பினை வளர்ப்பதற்காக, தான் மற்றொரு உயிரின் உடம்பினைத் தின்பவன் எவ்வாறு அருனினை நடத்துவான்?

2. பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி

ஆங்குஇல்லை ஊன்தின் பவர்க்கு. |ப-ரை) பொருள் - வைத்துள்ள பொருளினால், ஆட்சி - பயனடைதல், போற்றாதார்க்கு - அதனைப் போற்றிக் காப்பாற்றாதவர்களுக்கு, இல்லை - இல்லை யாகும், ஆங்கு - அதுபோல, அருளாட்சி - அருளினால் பயனடைதல், ஊன் - புலால், தின்பவர்க்கு - உண்பவர் களுக்கு, இல்லை - இல்லையாகும்.

(கரை) பொருளால் பயனடைதல் அ த ைன க் காப்பாற்றாதவர்களுக்கு இல்லை. அதுபோல அருளால் பயனடைதல் என்பது ஊன் தின்பவர்களுக்கு இல்லை.