பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

3. படைகொண்டார் கெஞ்சம்போல் கன்று ஊக்காது

உடல்சுவை உண்டார் மனம். (ஒன்றன் (ப-ரை ஒன்றன் . பிறிதோர் உயிரின், உடல் - உடலினை, சுவையுண்டார் . சுவைபட உண்டவர், மனம் - மனம், படை - கொலைக்கருவியினை, கொண்டார் . கையில் கொண்டவருடைய, நெஞ்சம் போல் - நெஞ்சத் தினைப் போல, நன்று. அருளினை, ஊக்காது - நினைக்காது.

(கரை) கொலைக் கருவியினைக் கையில் வைத்திருப் பவர்கள் மனம் கொலை செய்வதையே நோக்கும். அருளினை நோக்காது; அதுபோல, புலாலைச் சுவைபட உண்பவர் மனம் ஊனையே நோக்கும்; அருளினை நோக்காது. -

4. அருள் அல்லது யாது.எனின் கொல்லாமை கோறல்

பொருள் அல்லது அவ்வூன் தினல்.

(ப ரை) அருள் - அருள் என்பது, யாது . எது, எனின் - என்று கேட்டால், கொல்லாமை கொலை செய்யாமைகே: யாகும், அல்லது - அந்த அருள் அல்லாதது யாதென்றால், கோறல் - கொல்லுதலாகும், அவ்வூன்தினல் - அந்த ஊனி னைத் தின்னுதல், பொருள் . அறம், அல்லது . அல்லாத தாகும்.

|க-ரை) அருள்யாது என்று கேட்டால் கொல்லாமையே யாகும். அருள் அல்லாதது யாது என்றால் கொலை செய்வ தேயாகும். கொன்ற ஊனைத் தின்னுதல் தீமையாகும்.

5. உண்ணாமை உள்ளது உயிர்கிலை; ஊன் உண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு. (ப-ரை) உயிர் . உயிர்கள், நிலை - உடம்புகளிலே நிற்பதானது, ஊன் . ஊணினை, உண்ணாமை. உண்ணாமை பினால், உள்ளது - உள்ளதாகும், (ஆதலால்) உண்ண அந்த உயிர்களைக் கொன்று ஊனை ஒருவன் உண்ணு வானானால், அளறு - அவனை விழுங்கிய துன்ப உலகம்,