பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

5. அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள் கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

(ப-ரை) அருள் - அருள் என்பதன் பெருமையினை, கருதி - அறிந்துணர்ந்து, அன்பு . அதன் மேல் அன்பு, உடையராதல் - கொண்டு நடப்பதென்பது, பொருள் . மற்றவருடைய பொருளினை கருதி - திருடுவதற்குக் கருதி, பொச்சாப்பு - அவருடைய சோர்வினை, பார்ப்பார்கண் . பார்த்துக் கொண்டிருப்பவர்களிடத்தில், இல் - இல்லை யாகும்.

(க-ரை அருளினைப் பெறக் கருதி அதன் மீது அன்பு கொண்டிருப்பவராக நடந்துகொள்ளுதல் என்பது, பிறன் பொருளினைக் கள வினால் எடுத்துக் கொள்ளுவோம் என்பவரிடம் உண்டாகாது.

6. அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் கள விள்கண்

கன்றிய காத லவர்.

(ப-ரை) களவின் கண் - களவு செய்வதிலே, கன்றிய - அதிகமான, காதலவர் . ஆசையினையுடையவர்கள், அளவின் கண் - உயிர் முதலியவற்றை அளந்தறியும் மெய்ந் நெறியில், நின்று - நிலையாக நின்று, ஒழுகல் - நடந்து கொள்ள, ஆற்றார் . வலிமையில்லாதவர்கள்.

(கரை) உயிர் முதலியவற்றை அளக்கும் சீரிய செந் நெறிக் கண் நின்று அதற்குத் தகுந்தபடி ஒழுக முடியா தவர்கள் யாரென்றால், களவு செய்வதிலேயே மிகுந்த விருப்பம் உடையவர்கள் என்பதாகும்.

7. களவென்னும் கார்அறிவு ஆண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார்கண் இல், (ப-ரை) களவு - களவு, என்னும் என்று சொல்லப்படு கின்ற, கார் - அஞ்ஞானத்தால் இருண்ட அறிவாண்மை - அறிவினையுடையவர்களாக இருத்தல் என்பது, அளவு - உயிர் முதலியவற்றை அளத்தல், என்னும் . என்கின்ற,