பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

10. கள்வார்க்குத் தள்ளும் உயிர்கிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தேள் உலகு.

(ப-ரை) கள் வார்க்கு - களவினையே செய்து கொண்டி டிருப்போர்க்கு, உயிர்நிலை - உயிர் நிற்கின்ற உடம்பும், தள்ளும் - தவறி விடுவதாகும், கள்ளார்க்கு களவின்ை எண் ணாதவர்க்கு, புத்தேள் - தேவர், உலகு - உலகமும், தள்ளாது தள்ளாமல் ஏற்கும்.

(கரை) களவினைச் செய்வார்க்கு உயிர் நிற்பதான

உடம்பும் தவறும். களவினை எண்ணாதவர்க்குத் தேவர் கள் உலகமும் தள்ளாமல் ஏற்கும். -

30. வாய்மை

(வாய்மையினது தன்மையும் விளக்கமும்)

1. வாய்மை எனப் படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல். 8

(புரை) வாய்மை வாய்மை, எனப்படுவது என்று. பெருமையாகப் பேசப்படுவது, யாது . எது, எனின் - என்று கேட்டால், யாதொன்றும் சிறிதளவேனும், தீமை . தீமையினை, இல்லாத உண்டாக்காத சொற்களை, சொலல் - சொல்லுதல் என்பதாகும்.

(க. ரை) வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால், அது மற்ற உயிர்சளுக்குத் திங்கினைச் சிறிதும் உண்டாக்காத சொற்களைச் சொல்லுதலாகும்.

2. பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

கன்மை பயக்கும் எனின்,

(ப. ரை புரை - குற்றம், தீர்ந்த - அற்ற, நன்மை. நன்மையினை, பயக்கும் - கொடுக்கும், எனின் . என்றால், பொய்ம்மையும் . பொய்யான சொற்களும், வாய்மை