பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

5. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை.

(ப-ரை) மனத்தொடு - மனத் தொடு சேர்ந்து, வாய் ம - உண்மையினை, மொழியின் சொல்லு வானா னால், (அப்படிப்பட்டவன்) தவத்தொடு - தவம் செய்வ தோடு, தானம் - தானத்தையும், செய்வாரின் தலை . சேர்ந்து செய்வாரைவிட மேன்மையானவனாவான்.

(க-ரை) ஒருவன் தனது மனத்தோடு பொருந்த வாய்மையினைச் சொல்லுவானானால், அவன் தானமும் தவமும் ஒருங்கே செய்பரைவிட மேலானவனாவான்,

6. பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை

எல்லா அறமும் தரும். (ப-ரை) பொய்யாமை - பொய் சொல்லாமை, அன்ன. போன்ற, புகழ் - புகழுக்கு அடிப்படையானது, இல்லை . வேறு எதுவும் இல்லை, (ஏனெனில் எய்யாமை - மெய் வருந்தாமலேயே, எல்லா - எல்லா, அறமும் - அறத்தினை யும், தரும் . அதுவே கொடுத்து விடும்.

|க-ரை) பொய்யாமையினைப் போன்று புகழுக்கு காரணமான வேறு எதுவும் இல்லை. வருத்தமின்றி எல்லா அறங்களையும் அதுவே கொடுப்பதாகும்.

7. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை கன்று.

(ப-ரை) பொய்யாமை - பொய் பேசாதிருத்தலையே, பொய்யாமை - பொய் பேசாதிருத்தலையே, ஆற்றின் . செய்யும் ஆற்றல் பெற்றுவிட்டால், பிற மற்றைய, அறம் - அறச்செயல்களை, செய்யாமை செய்யாமையே, செய்யாமை - செய்யாமையே, நன்று . நல்லதென்ப .தாகும். -