பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மனிதப் பிறவியென்று பெருமையுடனும் உரிமை வுடனும் சொல்லிக் கொள்வதற்கு முதன்மையான காரணம் மனிதத் தன்மை என்கிற பண்பாடேயாகும். நல்ல பல நூல்களைக் கற்றிருந்தாலும் அவைகளால் மனம் திருந்தி நல்லவர்களாக ஆகிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. திய எண்ணங்களினால் பகைமைக் குணத்தையே பலர் வளர்த்திருப்பார்கள். கற்ற நூல்கள் அவர்களை நல்லவர் களாகச் செய்து விடாது.

பலநல்ல கற்றக் கடைத்தும் மனம் கல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது. (823)

நல்ல மனம் படைத்தவர்களைத்தான் பண்பாளர்கள் என்று சொல்ல வேண்டும். மக்கள் என்ற பெருமைக்குச் சொல்ல வேண்டுமென்றால் உறுப்புக்களை வைத்துச் சொல்லிவிடக் கூடாது. எல்லோருக்கும் இருப்பது போலவே இவர்களுக்கும் கைகள், கால்கள், கண்கள், முதலிய உறுப்புக்கள் இருக்கின்றனவே-ஆதலால் இவர்களும் மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் தானே என்று சொல்லி விடக்கூடாது. மக்களுக்கென்று இருக்கவேண்டிய குணங்கள் இருந்தால்தான் அவர்களை மக்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்க

பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு. (993)

கயவர்கள் என்ற பெயரில் சொல்லப்பட வேண்டி அயவர்கள் நல்ல மக்கள் கூட்டத்திலேயே இருந்து வருவார்கள், அவர்களுக்கு எள்ளளவும் மனிதத்தன்மையே மனிதக்குணமே இருக்காது. ஆனால் பார்ப்பதற்கு மக்கள் போலவே இருப்பார்கள். இப்படிப்பட்ட கயவர்கள் நிறைந் திருக்கும் சமுதாயம் முன்னேற்றமடைவது அரிதாகும்.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன ; ஒப்பாரி யாம்கண்டது இல். (1071)