பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

5. அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தன்கோய்போல் போற்றாக் கடை.

|ப-ரை பிறிதின் - மற்றவோர் உயிர்க்கு வந்த, நோய் - துன்பத்தினை, தன் - தனக்கு வந்த, நோய்போல் . துன்பத்தினைப்போல, போற்றால் கடை - காப்பாற்றாத போது, அறிவினான் - துறவிகள் தாம் பெற்ற அறிவி னால், ஆகுவது ஆவதொரு பயன் - உண்டாகுமோ? |உண்டாகாது என்பதாகும்.!

(க-ரை மற்ற உயிர்க்கு வரும் துன்பத்தினைத் தனக்கு வந்ததுபோல நினைத்துக் காப்பாற்றாவிடில் உயிர் முதலான வற்றை உள்ளவாறு அறிந்த துறவிகளுக்கு, அறிவினால் ஆவதொரு பயன் உண்டோ? இல்லை என்பதாம்.

8. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல், (ப-ரை) இன்னா - மக்களுக்குத் துன்பம் கொடுப்பவை, என - என்று, தான் - தான், உணர்ந்தவை - அறிந்தவை களை, பிறன்கண் மற்றவர்களிடத்திலே, செயல் . செய் ததை, துன்னாமை -!கைக் கொள்ளாதிருத்தல், வேண்டும் . வேண்டப்படுவதாகும்.

(க-ரை) இவை மக்களுக்குத் துன்பம் தருபவை" என அறிந்தவற்றைத் துறவியானவன் பிறரிடத்தில் செய் வதைக் கருத்தில் கொள்ளாதிருத்தல் வேண்டும்.

7. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்.ஆம்

மாணாசெய் யாமை தலை.

(ப-ரை மனத்தானாம் - மனத்தோடு பொருந்த, மாணா - துன்பச் செயல்களை, எஞ்ஞான்றும் . எக்காலத்தி லும், யார்க்கும் - யார்க்கும், எனைத்தானும் . எவ்வளவு சிறிதளவேயானாலும், செய்யாமை தலை . செய்வா திருத்தல் முதன்மையான அறமாகும்.