பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

அற நூலுடையோர்கள் துறந்தார்க்குத் தொகுத்துக் கூறிய எல்லா அறங்களிலும் முதன்மையான அறமென்று சொல்லப்படும். - -

3. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று.அதன்

பின்சாரப் பொய்யாமை கன்று. (ப-ரை ஒன்றாக ஒன்றே ஒன்று என்பதாக இருக்க, கொல்லாமை . கொலை செய்யாமை என்ற ஒர் அறமே, நல்லது - நல்லதாகும், .ெ பா. ய் யா ைம - பொய் சொல்லாமை என்னும் அறம், அதன்.அந்தக் கொல்லாமை யென்பதற்கு, பின் பின்னே, சார - இருக்க, நன்று . நல்லதாகும். - (க-ரை) தன்னோடு இணைப்பின்றித் தானேயாக ஒரே ஒர் அறமாக இருக்க நல்லது கொல்லாமையேயாகும். அதன் பின்னே நிற்க, பொய்யாமை என்கிற அறம் நல்லதாகும்.

4. கல்ஆறு எனப்படுவது யாதெனின் யாது.ஒன்றும்

கொல்லாமை சூழும் நெறி. (ப-ரை) நல் - நல்ல, ஆறு - நெறி, எனப்படுவது . என்று சொல்லப்படுவது, யாது - எது, எனின் - என்று. கேட்டால், யாதொன்றும் - எந்த உ யி ரி ைன யு ம், கொல்லாமை-கொலை செய்யாமை என்னும் அறத்தினை, சூழும் - பாதுகாக்க நினைக்கும், நெறி - நெறியேயாகும்.

(க-ரை நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்றால் அது யாதோர் உயிரையும் கொல்லாமையாகிய ஆறத்தினைக் காக்கும் நெறியேயாகும். -

5. கிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை. ,” (ப-ரை நிலை - இப்பிறவியின் நிலையினை, அஞ்சி. அச்சப்பட்டு, (மீண்டும் பிறவாமை கருதி) நீத்தாருள் -