பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

ஒழிய - நீங்க, புள் உள்ளே - இருந்த பறவையானது, பறந்

தற்று - பறந்து போனது போன்றதாகும்.

|க-ரை) முட்டையானது தனித்துக் கிடப்ப,அதனுள்ளே இருந்த பறவை பருவம் வந்தவுடன் பறந்துபோன தன்மை யதாகும். எதுவென்றால், உடம்புக்கும், உயிருக்கும் உள்ள நட்பு என்பதாகும்.

9 . உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

வழிப்பது போலும் பிறப்பு.

|ப-ரை சாக்காடு - இறப்பு வருதல், உறங்குவது போலும் - உறக்கம் வருவதனை ஒக்கும், பிறப்பு - பிறப்பு வருதல், உறங்கி விழிப்பதுபோலும் . உறங்கியபின் விழிப்பு வருவதனை ஒக்கும்.

(க-ரை ஒருவனுக்குச் சாக்காடு வருவது, உறக்கம் வருவதற்கு ஒப்பாகும். அதன்பின் பிறப்பு வருதல், உறங்கியபின் விழித்தல் வருதலோடு ஒப்பாகும்.

10. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு. !ப-ரை) உடம்பினுள் - உடம்புகளுக்குள், துச்சில் - ஒதுக்கமாகவே, இருந்த இருந்துவந்த, உயிர்க்கு - உயிருக்கு, புக்கில் - எப்போதும் நிலையாக இருக்கும் இல்லம், அமைந்தின்று கொல் - இதுவரை அமைந்திருக்க வில்லை போதும்.

(க-ரை) உடம்பினுள் ஒதுக்கமாகவே இருந்து வந்த உயிர்க்கு, எப்போதும் நிலையாக இருப்பதோர் இல்லம். இதுவரை அமைந்ததில்லை போலும்.