பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

3. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

உண்மை அறிவே மிகும். 373.

(ப-ரை) துண் ணிய - நுட்பமான, நூல்பலகற்பினும்பற்பல நூல்களையும் ஒருவன் கற்றானாயினும், மற்றும் - அவனுக்குப் பின்னும், தன் . தனது, உண்மை ஊழினா லாகிய, அறிவே . பேதை அறிவே, மிகும் . மிகுந்து நிற்கும்.

(க-ரை) ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்தி தும் நூல் பலவற்றைக் கற்றிருந்தாலும், அவனுக்குப் பின்னும் தன் ஊழாலாகிய பேதைமை (அறியாமை) அறிவே மேற்பட்டு நிற்கும்.

4. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு. 374.

(ப-ரை) உலகத்து - உலகத்தினுடைய, இயற்கை - ஊழென்னும் இயற்கையானது, இரு - இரண்டு, வேறு வேறுபட்ட தன்மையாக இருக்கின்றது, திரு. செல்வம் உண்டாவதும், வேறு வேறு, தெள்ளியராதலும் அறிவுடையராதலும், வேறு - வேறு ஆகும்.

(க-ரை உலகத்தில் ஊழினாலாகிய இயற்கை இரண்டு வகைப்படும். இரண்டு வேறுபட்ட தன்மைய த" இருக்கும். ஆதலால், செல்வம் உடையராதலும் வேறு: அறிவுடையராதலும் (தெள்ளியராதலும்) வேறு.

5. கல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு. 375.

(ப-ரை) செல்வம் - செல்வத்தினை, செயற்கு . செய்து சட்டுவதற்கு, நல்லவை . நன்மையானவை, எல்லாம் . எல்லாம், தீயவாம் . தீயவைகளாக முடியும், தீயவும் . தீமையானவைகள், நல்லவாம் . நல்லவைகளாகச் செய்யும். - ...