பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

தனது, சொலால் - புகழுடன் பொருந்தி, தான் - தான், கண்டனைத்து - கருதின அளவினதாக அமையும்,

(கரை) இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து காப்பாற்ற வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தனது புகழோடு பொருந்தி அவன் எண்ணிய அளவில் இருக்கும்.

8. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறைஎன்று வைக்கப் படும். 388

|பரை) முறை - அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறியில், செய்து - ஆட்சி செய்து, காப்பாற்றும் . மக்களைக் காப்பாற்றுகிற, மன்னன் . மன்னவன், மக்கட்கு - மக்களுக்கு, இறை செயலினாலே இறைவன், என்று - என்பதாக, வைக்கப்படும் - வைக்கப்படுவான்.

(க.ரை அரசனுக்கு ஏற்ற முறையைச் செய்து மக்களைத் துன்புறாமல் காப்பாற்றும் மன்னவன் பிறப்பால் மகனே யானாலும் செயலால் மக்களுக்கு இறைவன் என்று வைக்கப்படும்.

9. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. 389 (ப.ரை) சொல் . துணைநிற்பவர் சொல்லும் சொற் கள், செவி - காது, கைப்ப பொறுக்க முடியாததாக இருந் தாலும், பொறுக்கும் - பயன் கருதிப் பொறுத்துக் கொள்ளு கின்ற, பண்பு - நற்குணம், உடைய - உடைய, வேந்தன் . வேந்தனது, கவிகைக்கீழ் - குடைநிழலின் கீழ், தங்கும் உலகு - இந்த உலகமானது தங்கி இருக்கும்.

(கரை) துணையாக இருப்போர் செவிப்பொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைச் சொன்னாலும் அவற்றின் நன்மை கருதிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடை வேந் தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும்.