பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

என்ப என்று சொல்லப்படுபவைகளையும், இவ்விரண்டும். ஆக இந்த இரண்டினையும், வாழும் வாழ்தற்குரிய, உயிர்க்கு - மக்களுக்கு, கண் என்ப கண்களாகும் என்று அறிந்தோர் கூறுவர்.

(கரை) எண் என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று சொல்லப்படுவதும் ஆகிய இரண்டையும் அறிந்தோர், சிறப்புடைய மக்களுயிர்கட்குக் கண் என்று சொல்லு வார்கள்.

3. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு புண்ணுடையர் கல்லா தவர். 393

(ப-ரை) கண் கண்கள், உடையர் . உடையவர்கள், என்பவர் - என்று சிறப்பாகச் சொல்லப்படுபவர்கள், கற்றோர் - கற்றவர்களே ஆவார்கள், கல்லாதவர். கற்காதவர்கள், முகத்து முகத்தில், இரண்டு - இரண்டு, புண் - புண்களை, உடையவர் . உடையவர்களாவார்கள்.

(கரை) கண்ணுடையவர்கள் என்று உயர்த்திச் சொல்லப்படுபவர்கள் சுற்றவர்களே ஆவார்கள். கல்லாத வர்கள் முகத்தில் இரண்டு புண்ணுடையவர்கள் ஆவார்கள்.

4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில். 394

|ப-ரை உவப்ப - பிறர் மகிழுமாறு, கலைக்கூடி . அவருடன் கலந்து, உள்ள - இனி எப்போது அவரைக் காண்போம் என்று நினைக்கும்படியாக, பிரிதல் . பிரிவ தாகிய, அனைத்து - அத்தன்மையினை உடையதே, புலவர் கற்றறிந்தவர்களது, தொழில் . செயலாகும்.

(கரை) யாவரும் மகிழுமாறு அவர்களுடன் சேர்ந்து பழகி, இனி அவரை எப்போது காண்போம் என நினைத் துப் பிரிகின்ற தன்மையுடையதே கற்றவர்களின் தொழி லாகும்.