பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182.

(க-ரை) கல்வி இல்லாத ஒருவன் அவையில் ஒன்றைக் சொல்ல ஆசைப்படுதல் முலை இரண்டும் இல்லாத, (முகிழ்த்தல் இல்லாத) பெண்ணான ஒருத்தி பெண்ணின் பத்தை விரும்பியது போலாகும்.

3. கல்லா தவரும் கனிால்லர் கற்றார்முன் - சொல்லா திருக்கப் பெறின். 403.

|ப-ரை) கற்றார்முன் - கற்றறிந்தவர்கள் இருக்கும் அவையில், சொல்லாது - யாதொன்றையும் சொல்லாமல், இருக்க இருக்கும் தன்மையினை, பெறின் பெற்றிருப் பார்களேயானால், கல்லாதவரும் கல்வி இல்லாதவர்களும்: நல்லர் - நல்லவர்களாவார்கள்.

(கரை) தாமே தம்மையுணர்ந்து கொண்டு கற்றார் இருக்கும் அவையின்கண ஒன்றனையும் சொல்லாதிருந்தால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவர்கள் ஆவார்கள்.

4. கல்லாதாள் ஒட்பம் கழியான்று ஆயினும்

கொள்ளார் அறிவுடை யார். 404,

(ப-ரை கல்லாதான் - கல்லாதவனுடைய, ஒட்பம் . அறிவுடைமையானது, கழிய - மிகவும், நன்றாயினும் . ஒரோ வழி நன்றாக இருந்தாலும் கூட, அறிவுடையார் . அறிவுள்ளவர்கள், கொள்ளார் . அதனை அறிவுடைமை யாகக் கொள்ள மாட்டார்கள்,

(கரை) கல்லாதவனுடைய அறிவுடைமை ஒரு நேரத் தில் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையவர்கள் அதனை அறிவாகக் கொள்ள மாட்டார்கள்.

5. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும். 405 (ப-ரை) கல்லா . கல்வியறிவில்லாத, ஒருவன் ஒருவன், தகைமை - கற்றவனென்று தன்னை மதிக்கும் மதிப்பு, தலைப்பெய்து - கற்றவனைக் கண்டு, சொல்லாட - உரை கபாட, சோர்வுபடும் - கெட்டுவிடும்,