பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

8. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு. 408

|ப-ரை) கல்லார்கண் - கல்லாதவரிடத்தில், பட்டதிரு. இருக்கின்ற செல்வம், நல்லார்கண் - நன்கு கற்றவரிடத்தில், பட்டவறுமையின் - உண்டாகியுள்ள வறுமையினைக் காட்டிலும், இன்னாதே - துன்பம் தருவதாகும்.

(க-ரை) கல்லாதவர்களிடத்தில் உண்டாகிய செல்வ மானது கற்றவரிடத்தில் உண்டாக்கிய வறுமையினை விடவும் துன்பம் செய்வதாகும்.

9. மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்து இலர் பாடு. 409

(ப-ரை) கல்லாதார் - கல்வியறி வில்லாதவர்கள். மேற். பிறந்தார் . மேலான குடும்பத்தில் பிறந்தவர்கள், ஆயினும். ஆனாலும், கீழ்ப்பிறந்தும் - கீழான குடும்பத்தில் பிறந்திருந் தும், கற்றாரனைத்து - கற்றவரடையும் அளவு, பாடு இலர் - சிறப்பு இல்லாதவராவார்கள்.

(க-ரை) கல்லாதவர்கள் மேலானவர்கள், பிறந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும், கீழானவர்கள் குடும்பத்தில் பிறந்து, கற்றவர்களாக இருப்பவரது பெருமையினைப் பெறாதவர்களாவார்கள். w

10. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர். 410

(ப-ரை) இலங்கு விளங்கிய, நூல் - நூலினை: கற்றாரோடு . கற்றவர்களோடு நோக்க, ஏனையவர் . கல்லாதவர்கள், விலங்கொடு - விலங்குகளோடு (ஒப்பிட்டுப் பார்க்க) மக்களனையர் . மக்கள் எவ்வளவு நன்மை யுடையவர்களோ அவ்வளவு தீமையுடையவர்களாவார்கன்.