பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

(கரை) நிலைபெற்ற மக்களுயிர்க்கு மனம் நன்றாக இருப்பது செல்வத்தினைத் தரும். இனமானது நன்றாக இருப்பதானது எல்லாப் புகழினையும் கொடுக்கும்.

8. மனநலம்.நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு. இனநலம் ஏமாப்பு உடைத்து. 458, (ப-ரை மனநலம் - மனம் நன்றாக இருப்பதை, நன்கு. உடையராயினும் - நல்லபடியாகத் தாமே உடையவராக இருந்தாலும், சான்றோர்க்கு - நிறைகுணம் பெற்ற பெரியார்களுக்கு, இனம்.சேர்ந்த இனம், நலம் - நன்றாக இருப்பது, ஏமாப்பு - பாதுகாப்பான வலிமையாதலை, உடைத்து - உடையதாகும். * *

(கரை) மனம் நன்றாக இருப்பதனை நல்லபடியாகத். தாமே தம் பிறவியிலேயே உடையவராக இருந்தாலும், நிறைகுணம் பெற்ற பெரியோர்களுக்குச் சேர்ந்த இனம் நன்றாக இருப்பது, காப்பான வலிமை உடையதாகும்.

9. மனகலத்தின் ஆகும் மறுமைமற்று அ.தும்

இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. - 459: (ப-ரை மன நலத்தின் ஒருவனுக்கு மனம் நன்றாக, இருந்தால், மறுமை ஆகும் - மறுமை இன்பம் உண்டாகும், மற்று அஃதும் - அதற்கு அந்தச் சிறப்பும், இன நலத்தின். இனம் நன்றாக இருப்பதால், ஏமாப்பு உடைத்து - பாது, காப்பான வலிமையினை உடையதாகும். . . .

(கரை) ஒருவனுக்கு மனம் நன்றாக இருந்தால் மறுமை இன்பம் உண்டாகும். அதற்கு அந்தச் சிறப்புத் தானும் இனம் நன்றாக இருந்தால் பாதுகாப்பான வலிமையினை உடையதாகும்.

10. கல்லினத்தின் ஊங்கும் துணைஇல்லை தீயினத்தின் அல்லல் படுப்பது உம் இல், 460. (ப-ரை நல் - நல்ல, இனத்தின் - இனத்தினைவிட, ஊங்கும் . மேற்பட்ட, துணை - துணை, இல்லை -