பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

|கடரை) தம்மால் முடியும் தொழிலையும், அத்ற்கு அறிய வேண்டிய வலிமையினையும், அறிந்து எப்போதும் அதனையே நினைவாகக் கொண்டு பகைமேல் செல்லும் அரசர்க்கு முடியாத பொருள் இல்லை.

3. உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஆக்கி

இடைக்கண் முரிந்தார் பலர். 473;

(ப-ரை உடை - தலைமையாகிய, தம் - தமது, வலி - வலிமையினை, அறியார் - அறிந்து கொள்ளாதவராகி, ஊக்கத்தின் . தமது மன ஊக்கத்தினால், ஊக்கி - போர் செய்யத் தொடங்கி அது முடிவு பெறாமல்) இடைக்கண் . நடுவிலே, முரிந்தார் பலர் கெட்ட அரசர் உலகில் பலராவார்.

(கரை) முதன்மையாக உடைய தனது வலிமையினை அளந்தறியாமல் மன எழுச்சியால் தம்மைவிட வலியரோடு போர் செய்தலைத் தொடங்கி முடிக்கப் பெறாமல் இடையே கெட்ட அரசர் பலருண்டு.

4. அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியாள் தன்னை வியந்தான் விரைந்து கெடும். 474.

|ப-ரை) ஆங்கு - மாற்றாரிடத்தில், அமைந்து ஒழுகான் - பொருந்தி நடந்து கொள்ளாதவனாயும், அளவு - தனது வலிமையின் அளவினை, அறியான் - அறிந்து கொள்ளாதவனாயும், தன்னை வியந்தான் . தன்னையே. புகழ்ந்து கொண்டு பசுைத்த அரசன், விரைந்து கெடும் - விரைவினில் கெட்டுவிடுவான்.

(கரை) பிறரொடு பொருந்தி ஒழுகுவதும் செய்யா மல், தனது வலிமையினையும் அறியாமல் தன்னையே. பெருமையாக வியந்து கொண்டு பகைத்துக் கொண்டி, அரசன் விரைவாகக் கெடுவான். х ... . . .