பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

க-ரை சதல் செய்வதனைத் தமக்கு 2-gircr பொருளின் எல்லையை அறிந்து அதற்கேற்ப ஈதலினைச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்தல், பொருளினைப். போற்றிக் கொண்டொழுகும் வழியாகும்.

8. ஆகாறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை. 478

(ப.ரை1 போகு -பொருள் செலவாகின்ற, ஆறு - வழி, அகலாக்கடை - அதனைவிடப் பெரியதாக இல்லாதிருக்கு மானால், ஆகு வருவாய் (பொருள் வருகின்ற, ஆறு - வழியானது, அளவு - அளவானது, இட்டிது - சிறிதான தாக, ஆயினும் - இருந்தாலும், கேடு - கெடுதி, இல்லை . இல்லையாகும்.

(கரை) செலவு செய்யப்படுகின்ற வழியின் அளவு அதனைவிடப் பெரிதாக இல்லாமலிருந்தால் பொருள் வருகின்ற வழியளவு சிறிதாக இருந்தாலும் அதனால் கெடுதி இல்லை.

9. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும். 479

{ப-ரை) அளவு அறிந்து - தனக்குள்ள பொருளின் அளவினை அறிந்து கொண்டு, வாழாதான் வாழ்க்கை . அதற்கேற்ப வாழாதவனுடைய வாழ்க்கையானது, உள போல - உள்ளது போலத் தோற்றமளித்து, இல்லாகி - உண்மையில் இல்லாததாகி, தோன்றா - பிறகு அந்தத் நோற்றமும் இல்லாமல், கெடும் . கெட்டுவிடும்.

(கரை) தனக்குள்ள பொருளின் அளவினை அறிந்து அதற்கேற்ப வாழாதவன் வாழ்க்கை, இருப்பது போலத் தோன்றி உண்மையாகவே இல்லாததாகி, பிறகு அத் தோற்றமும் இல்லாமல் கெட்டுவிடும்.