பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

7. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றுஆய்ந்து

அதனை அவன்கண் விடல். 517

(ப.ரை இதனை - இந்தத் தொழிலினை, இதனால் . இந்தக் கருவியினால், இவன் . இவன், முடிக்கும் - முடிக் கின்ற வல்லமையுடையவன், என்று - என்று, ஆய்ந்து . ஆராய்ந்து, (இம்மூன்றும் ஒத்திருந்தால்) அதனை . அத் தொழிலினை, அவன் கண் - அவனிடத்தில், விடல் - செப் வதற்கு விடுதல் வேண்டும்.

|க-ரை) இத்தொழிலினை இக்கருவியினால் இவன் முடிக்க வல்லவன் என்று வகைப்படுத்தி ஆராய்ந்து, அவை யனைத்தும் ஒத்திருந்தால் அத்தொழிலினை அவனிடம் விடுதல் வேண்டும்.

8. வினைக்கு உரிமை காடியபின்றை அவனை

அதற்குரியவன் ஆகச் செயல். 518

!ப-ரை வினைக்கு உரிமை - தொழிலினைச் செய்ய உரியவனாக இருக்கும் தன்மையினை, நாடிய ஆராய்ந்து அறிந்த, பின்றை - பிறகு, அவனை அதற்கு - அவனை அத் தொழிலினை மேற்கொண்டு செய்வதற்கு, உரியவனாக . உரிமை உடையவனாக, செயல் - செய்து வைத்தல் வேண்டும். х

(கரை) ஒருவனை ஆராய்ந்தறிந்து தனது தொழி லுக்கு உரியவனாகத் துணிந்த பிறகு அவனை அத் தொழிலுக்கு உரியவனாக உயரச் செய்தல் வேண்டும்.

9. வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக

கினைப்பானை நீங்கும் திரு. 519. (ப-ரை வினைக்கண் மேற்கொண்ட தொழிலினிடத் தில், வினையுடையான் - எப்போதும் நல்ல முயற்சி புடையவன், கேண்மை - உரிமையால் சுற்றம் போல் தடக்கின்ற, தன்மையினை, வேறாக நினைப்பானை .