பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239

5. இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் காட்ட

பெயலும் விளையுளும் தொக்கு. 545

(டி-ரை பெயலும் பருவகாலத்து மழையும், விளை புளும் - குன்றாத விளைச்சலும், தொக்கு - ஒன்றுகூடி, இயல்புளி நூல்களில் கூறப்பட்ட இயல்பினாலே, கோல் - செங்கோ வினை, ஓச்சும் - செலுத்தும், மன்னவன் . மன்னனது, நாட்ட நாட்டில் இருப்பனவாகும்.

|க-ரை நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலி னைச் செலுத்தும் மன்னனது நாட்டில் பருவ மழையும் குன்றாத விளைச்சலும் ஒருங்கே சேர்ந்து இருப்பனவாகும்.

6. வேல் அன்று வென்றி தருவது மன்னவன்

கோல்அது உம் கோடாது எனின், 546 (ப-ரை) மன்னவன் - மன்னனுக்கு, வென்றி . போரில் வெற்றியினை, தருவது கொடுப்பது, வேல் . வேற்படை, அன்று - அல்ல, கோல் - அவனுடைய செங்கோலாகும், அது உம் - அக்கோலும், கோடாது தான் கோணாமல், எனின் . இருக்குமானால்,

(க-ரை மன்னனுக்குப் போரில் வெற்றியினைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அல்ல; செங்கோலே யாகும். அக்கோலும் கோணாது இருக்குமானால் என்பதாம்.

7. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின். 547

|ப-ரை வையகம் - பூமி, எல்லாம் - முழுவதையும், இறைகாக்கும் - மன்னவன் காப்பாற்றுவான், அவனை . அம்மன்னனை முறை - அவனுடைய செங்கோலானது, காக்கும் . காப்பாற்றும், (எப்போது முட்டாச்செயின் . செங்கோலினை முட்டாமல் செலுத்துவானானால்,

|க-ரை) வையகத்தையெல்லாம் அரசன் காப்பாற்று. வான் : அந்த அரசனை அவனுடைய செங்கோல்: