பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257

10. சிறப்பு:அறிய ஒற்றின்கண் செய்யற்க)செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை. r 590 (ப-ரை ஒற்றின் கண் - ஒற்றணிடத்துச் செய்யும், சிறப்பு அறிய சிறப்பினைப் பிறர் அறிந்து கொள்ளுமாறு, செய்யற்க - செய்யாதிருத்தல் வேண்டும். செய்யின் - பிறர் அறியச் செய்தால், மறை - மறைவாக அடக்கி வைக்கப்பட வேண்டியதை, புறப்படுத்தான் . தானே வெளிப்படுத் தின வன், ஆகும் ஆகிவிடும்.

(க-ரை) மறைவாகச் செய்தவற்றை அறிந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பினைப் பிறர் அறியுமாறு செய்யாதிருக்க வேண்டும். அப்படிச் செய்வானானால், மறைத்து வைக்கப்பட வேண்டியதைத் தானே வெளிப் படுத்திவிட்டான் என்பதாகும். -

60. ஊக்கம் உடைமை மனம் தளர்ச்சியின்றி எழுச்சியுடன் செயல் புரிதல்

1. உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்

உடையது உடையரோ மற்று. 591

(ப-ரை உடையர் - ஒருவரை உடையவர், எனப் படுவது . என்று சொல்லச் சிறந்தது, ஊக்கம் - ஊக்கம் என்னும் மன உணர்ச்சியேயாகும், அஃது . அத்தகைய ஊக்கம், இல்லார் - இல்லாதவர்கள், மற்று . வேறு, உடையது - உடையரேயாயினும், உடையரோ - உடைய வர்கள் ஆவார்களோ? ஆக மாட்டார் என்பதாம்.)

(க-ரை) ஒருவரை உடையவர்' என்று சொல்லச் சிறந்தது ஊக்கமே யாகும். அந்த ஊக்கம் இல்லாதார் வேறு யாது உடையவராயினும் உடையவர் ஆவரோ! ஆகார் என்பதாம். # -

தி, தெ.-17