பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259

5. வெள்ளத்து அனைய மலர்கீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அணையது உயர்வு. 595

|ப-ரை மலர்நீட்டம் - நீர்ப்பூக்களுடைய தண்டு அளின் நீளம், வெள்ளத்தனைய இருக்கின்ற நீரினது அளவேயாகும், அதுபோல) மாந்தர் . மக்களுடைய, உள்ளத்தனையது - அவர்கள் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவினதேயாகும், (எதுவென்றால்) உயர்வு - அவர் களுடைய உயர்ச்சியான சிறப்பு.

(க-ரை) நீர்ப்பு பூக்களின் தாளினது நீளமானது நின்ற நீரினது அளவினதாக இருக்கும். அதுபோல மக்களுடைய .ஊக்கத்தின் அளவினதேயாகும், அவர்களுடைய உயர்ச்சி.

6. உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்று அது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து. 596

(ப-ரை உள்ளுவது. நினைப்பது, எல்லாம் . எல்லாம்; உயர்வு - உயர்ச்சியினையே, உள்ளல் - நினைத்தல் வேண்டும், அது - அவ்வாறு நினைத்த உயர்ச்சியானது. தள்ளினும் - கைகூடாமல் போனாலும், தள்ளாமை . தள்ளாமையான, நீர்த்து - தன்மையினை உடையதாகும்.

(க-ரை தாங்கள் கருதுவதெல்லாம் தங்களின் உயர்ச் சியினையே கருதுதல் வேண்டும். அவ்வுயர்ச்சி கூடிவர வில்லையென்றாலும், அக்கருத்து, தள்ளாத தன்மையினை உடையதாகும்.

7. சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்

பட்டுப்பாடு ஊன்றும் களிறு. 597

(ப-ரை) களிறு - யானையானது, புதை - கட்டாக இருக்கும், அம்பின் - அம்புகளினாலே, பட்டு . புண்பட்ட போதும், பாடு - தளராமல் தனது பெருமையினை, ஊன்றும் - நிலை நிறுத்தும், (அதுவேபோல) உரவோர் . ஊக்கம் உடையவர்கள், சிதைவிடத்து-தாம் கருதிய உயர்ச்