பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

2. மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர். 6ü演

(ப-ரை) குடியை - தனது குடியினை, குடியாவேண். பவர் - உயர்ந்த நற்குடியாக இருக்க விரும்புகிறவர்கள், மடியை - சோம்பல் தன்மையினை, மடியா - சோம்ம.

லாகவே கருதி, ஒழுகல் - முயற்சியுடன் ஒழுகுவார்களாக,

(க-ரை தாம் பிறந்த குடியை மேன்மேலும் உயர்ந்த, குடியாகச் செய்ய வேண்டுவோர் சோம்பலாகவே. நினைத்து முயற்சியுடன் ஒழுகுதல் வேண்டும்.

3. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியும் தன்னினும் முந்து. 603

(ப-ரை) மடி - விட்டு விடவேண்டிய, மடிகொண்டு . சோம்பலினைத் தன்னுள்ளே இருக்க வைத்து, ஒழுகும் பேதை - நடந்து கொள்ளும் அறிவற்றவன், பிறந்த குடி - பிறந்துள்ள குடியானது, தன்னினும் . அவன் காலம் முடிவதற்குள், முந்து - முன்னமேயே, மடியும் - கெட்டும் போகும்.

(கரை) விடவேண்டிய சோம்பலினைத் தன்னுள்ளே வைத்து நடக்கின்ற அறிவில்லாதவன் பிறந்துள்ள குடியானது, அவனுடைய காலம் முடிவதற்குள் அழிந்து விடும்.

4. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

மாண்ட உஞற்றுஇ லவர்க்கு 604,

(ப.ரை மடி - சோம்பவிலேயே, மடிந்து - வீழ்ந் தமிழ்ந்து, மாண்ட சிறந்த, உஞற்றிலவர்க்கு - முயற்சி இல்லாதவர்களுக்கு, குடிமடிந்து - தனது குடியும் அழிந்து, குற்றம் பெருகும் - குற்றமும் பெருகிவிடும்.

|க-ரை சோம்பலிலேயே வீழ்ந்தமிழ்ந்து சிறந்த முயற்சி இல்லாதவர்களுக்குத் தனது குடியும் அழிந்து குற்றமும் பெருகிவிடும்.