பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265

- :க-ரை) தன் அடியளவினாலே எல்லா உலகையும் அளந்தவனுடைய பரப்பு முழுவதையும் மடியில்லாத (சோம்பலில்லாத) மன்னன் ஒரே காலத்தில் ஒருங்கே அடைவான். -

62. ஆள்வினை உடைமை (இடைவிடாத மெய்ம்முயற்சி உடையவனாதல்)

1. அருமையுடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும். 6 fi

(ப-ரை அருமை . இச்செயல் முடிப்பதற்கு அருமைத் தன்மையினை உடைத்து - உடையதாக இருக்கின்றது. என்று - என்று கருதி, அசாவாமை - மனம் தளராமை. வேண்டும் வேண்டியதாகும், பெருமை - அத்தொழி லினைச் செய்து முடிக்கும் பெருமையினை, முயற்சி . முயற்சி - முயற்சியானது, தரும் - உண்டாக்கித் தருவ தாகும். o,

(கரை) இத்தொழில் செய்து முடிக்க அருமை வானது என்று எண்ணி மனம் தளராதிருத்தல் வேண்டும்: அதனை முடித் தற்கேற்ற பெருமையினைத் தனக்கு முயற்சி உண்டாக்குவதாகும். ... : «

2. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 612. (பரை) வினை - தொழிலாகிய, குறை - குறை பாட்டினை, தீர்ந்தாரின் செய்யாது விட்டவரை, உலகு - உலகம், தீர்ந்தன்று - விட்டு விட்டது (ஆகையால் வினைக் கண் . செய்யத் தகும் தொழிலினிடம், வினைகெடல் செய்யாமல் செயலற்று இருப்பதை, ஓம்பல். நீக்குதல் வேண்டும்.