பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271

உலோபத் தன்மையினை, அறியாதாt . அறியாதவர்கள் ஆஈகைத் தன்மையில் இருந்தவர்கள்). அற்றேம் - பொரு எளின்றி வறியரானோம், என்று - என்று நினைத்து, அல்லல். மனத்தால் துன்பம், படுபவோ அடைவார்களோt 1அடையமாட்டார்கள்),

(க-ரை) செல்வம் பெற்றிருந்த காலத்தில் உலோபி யாக இருப்பதை அறியாதவர்கள், வறுமையுற்ற காலத்தில் .மனத்தினாலே துன்பப்படுவார்களோ? படமாட்டார்கள்.

7. இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். 627 {பரை உடம்பு - இந்த உடம்பானது, இடும்பைக்கு - துன்பத்திற்கு, இலக்கம் - வருகின்ற குறியிடம், என்று . என்பதனைத் தெளிந்து, கலக்கத்தை - தமக்கு வந்த துன்பத்தினை, கையாறா - துன்பம் என்பதாக, கொள்ளா தாம் கொள்ளமாட்டார்கள், மேல் - அறிவு நிறைந்த வர்கள்.

(க.ரை) உடம்பானது துன்பம் என்பதற்கு இலக்கு என்பதைத் தெரிந்துணர்ந்து தமக்கு வந்த துன்பத்தினைத் துன்பமாகக் கொள்ளமாட்டார்கள் அறிவுடையார் என்பதாம்.

8. இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்

துன்பம் உறுதல் இலன். 628

|ப-ரை) இன்பம் - இன்பமானவற்றை, விழையான் . விரும்பாமல், இடும்பை - துன்பம் வந்தால், இயல்பு . இது இயற்கை, என்பான் - என்று சொல்லுபவன், துன்பம். எந்நாளும் துன்பம், உறுதல் - அடைதல், இலன் . இல்லை &#1та тайr.

(கரை) தனக்கு இன்பமானவற்றை விரும்பாமல், துன்பம் வந்தால் இயற்கையென்று உணர்ந்திருப்பவன் தனது முயற்சியால் துன்பம் அடையமாட்டான்.