பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277

10. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்

திறப்பாடு இலாஅ தவர், 640

(ப-ரை) திறப்பாடு . செயலினை முடித்தற்கேற்ற முறைகளை, இலாதவர் . அறிந்தில்லாதவர்கள், முறைப் படசெய்ய வேண்டிய சொல்களை முன்பாகவே தெளிவுற, சூழ்ந்தும் - ஆராய்ந்து வைத்திருந்தும், முடிவிலவே . செய்யும்போது அவர்கள் முடிவுறாதபடியே, செய்வர் . செய்பவராவார். -

(க-ரை முடிப்பதற்கு ஏற்ற கூறுபாடுகள் அறியாத வர்கள், செய்யப்படும் தொழில்களை முன்பாகவே நன்கு எண்ணி வைத்திருந்தும் செய்யும்போது அவை முடியாத முடியே செய்வார்கள்.

\

65. சொல் வன்மை

'சொற்களைச் சொல்லுவதில் ஆற்றலுடைமை)

1. நாகலம் என்னும் நலன்உடைமை அங்கலம்

யாகலத்து உள்ளது உம் அன்று. 641

(டி-ரை) நா - நாவினால் உளதாகிய, நலம் . நன்மை, என்னும் - என்று சிறப்பித்துக் கூறப்படும், நலம் - நலத்தினை, உடைமை - உடையவராக இரு த் த ல் {வேண்டும்), அந்நலம் - அந்தச் சிறப்பானது, யாநலத்து - பிற நலங்கள் எல்லாவற்றிலும், உள்ளது உம் - அடங்குவ தும், அன்று - அல்ல (எல்லாவற்றையும்விட மேலானதாம்)

(கரை) அமைச்சரிக்கு மிகச் சிறந்த குணமாவது நாவின் நலம் உடையவராக இருத்தலாகும். அந்நலம் பிற எல்லா நலங்களையும் விட மேலானதாகும்.