பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283

தொழில்களை, செய்யற்க - செய்யாதிருத்தல் வேண்டும். செய்வானேல் - ஒரு வேளை தவறிச் செய்வானேயானால், மற்றுஅன்ன - பிறகு அவ்வாறு தானே வருத்தப்படும் செயல்களை, செய்யாமை நன்று - செய்யாதிருத்தல் நல்ல தாகும்.

|க-ரை) யான் செய்தது எப்படிப்பட்டது என்று பின்னர் தானே இரக்கப்படுகின்ற தொழில்களை ஒரு காலும் செய்யாதிருத்தல் வேண்டும். அப்படி ஒரு கால் மயங்கி செய்துவிடுவானே யானால், மீண்டும் அப்படிப் பட்டவற்றைச் செய்யாதிருத்தல் நல்லதாகும்.

8. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை. 656

(ப-ரை) ஈன்றாள் - தன்னுடைய தாயினது, பசி - பசியினை காண்பான் - காணுகின்றவன், ஆயினும் - என்றாலும், (அதை நீக்க சான்றோர் - அறிவு நிறைத் தோர், பழிக்கும் வினை - பழிக்கின்ற செயல்களை. செய்யற்க . செய்யாதிருத்தல் வேண்டும்.

(க-ரை) தன்னைப் பெற்ற தாயினது வறுமையினைக் கண்டு இரக்கப்படுகின்ற போதும், அதனைக் காட்டி அறிவுடையோர் பழிக்கும் தொழில்களை ஒருவன் செய்யா திருக்க வேண்டும்.

7. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிகல் குரவே தலை. 657 ° (ப ரை! பழி - பழியினை, மலைந்து சுமந்துகொண்டு, எய்திய அடைந்த, ஆக்கத்தின் . செல்வத்தினை விட சான்றோர் - பெரியோர்களின், கழி . மிகுதிப்பட்ட நல்குரவே - வறுமையே, தலை . உயர்ந்ததாகும்.

(கரை) தீமையான தொழில்களைச் செய்து அதனால் பழியினைத் தம் மேற்கொண்டு பெற்ற செல்வத்தினை விடப் பழியினை மேற்கொள்ளாத சான்றோர்கள் அனுபவிக்கும் மிகுந்த வறுமையே உயர்ந்ததாகும்.