பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287

காளிதானதாகும். அதனை அவ்வாறே செய்தல் பார்க்கும் அரியதாகும்.

5. வீறுளய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

ஊறுஎய்தி உள்ளப் படும். 665,

|ப-ரை) வீறு - எண்ணத்தால் சிறப்பினை, எய்தி . அடைந்து, மாண்டார் . பெருமையுற்ற அமைச்சரது, வினைத்திட்பம் - தொழில் திண்மையானது, வேந்தன்கண். வேந்தனிடத்தில், ஊறு எய்தி - ஆக்கமும் புகழும் உண்டாக்குவதனாலே, உள்ளப்படும் - எல்லோராலும் நன்கு மதித்துப் பாராட்டப்படும்.

(கரை) எண்ணத்தால் சிறப்படைந்து மாட்சிமைப் பட்ட அமைச்சரது தொழில் வலிமையானது வேந்தனிடத் தில் செல்வத்தினையும் புகழினையும் உண்டாக்குவதால் எல்லோராலும் நன்கு மதிக்கப்படும்.

8, எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின். 666,

|ப-ரை எண்ணியார் . எண்ணியவர்கள், திண்ணிய ராக - எண்ணிய தொழிலினிடத்தில் வலிமையுடையவராக, பெறின் - இருந்துவிட்டால், எண்ணிய - எண்ணப்பட்டவை. களையெல்லாம், எண்ணியாங்கு - எண்ணியவாறே, எய்துப அடையப் பெறுவார்கள்.

(க-ரை ஒன்றை நினைத்தவர்கள் அவற்றிற்குக் காரணமான தொழிலின்கண் திண்மையுடையவராக இருந்தால், தாம் அடைவதற்கு நினைத்த எல்லாவற்றை ஆயும் நினைத்தபடியே அடைய முடியும்.

7. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு - அச்சாணி அன்னார் உடைத்து. - 66%

(பரை) உருள் - உருளுகின்ற, பெரும் - பெரிய, தேர்க்கு . தேரினுக்கு, அச்சானி . அச்சில் உள்ள ஆணி,