பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309

உடையனாதல், ஆற்றின் - நன்னெறிக்கண் நின்ற ஒருவன்; திலை . தனது நிலைமை, தளர்ந்தற்றே - கெட்டு வீழ்ந்த தைப் போன்றதாகும்.

(கரை) அகன்ற நூற் பொருள்களை ஆய்ந்துணர வல்லார் அவையில் வல்லானொருவன் சொற்குற்றப் படுதல், நன்னெறிக்கண் நின்றான் ஒருவன் அந்நெறியி லிருந்து நிலை தளர்ந்து வீழ்ந்ததைப் போன்றதாகும்.

7. கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடுஅறச்

சொல்தெரிதல் வல்லா ரகத்து, 717

பெ-ரை) கசடு - குற்றம், அற - இல்லாமல், சொல் - சொற்களை, தெரிதல் - ஆராய்ந்து அறிவதில், வல்லார் - வல்லவர்கள், அகத்து . சபையில், கற்று . பல நூல்களை யும் கற்று, அறிந்தாரி - அறிந்த புலமையாளரது, கல்வி விளங்கும் . கல்வியானது எல்லோருக்கும் விளங்கித் தோன்றுவதாகும். -

(க-ரை) குற்றமின்றிச் சொற்களை ஆராய்வதில் வல்லவர்கள் உள்ள அவைக் கண் சொன்னால் பல நூல் களையும் கற்று அவற்றின் பயனை அறிந்தவரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும்.

8. உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்

பாத்தியுள் நீர்சொரிங் தற்று. 718

(ப-ரை) உணர்வது - தாமே நற்கருத்துக்களை உணர வல்ல அறிவினை, உடையார்முன் . பெற்றிருப்பவர்கள் முன்னே, சொல்லல் - கற்றார் ஒன்றனைச் சொல்லுதல், வளர்வதன் . தானாகவே வளர்கின்ற பயிரி உள்ள, பாத்தியுள் பாத்திக்குள், நீர் - தண்ணீரை, சொரிந்தற்று - விட்டது போன்றதாகும்.

(க-ரை) பிறர் உணர்த்தாமல் தாமே உணர வல்ல அறிவினையுடையவர்கள் இருக்கும் அவையில் ஒன்றனைச்