பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. அவை அஞ்சாமை (அவையில் - சபையில்- அஞ்சாமல் பேசுதல்)

1. வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர். 721

(ப-ரை) சொல்லின் - சொற்களின் தொகை . பல்வேறு சொற்களின் கூட்டத்தினை, அறிந்து - அறிந்து தெரிந்த, தூய்மையவர் - தூய்மையான பண்பாளர்கள், வகை - சபைகளின் வகைகளை, அறிந்து - அறிந்து கொண்டு, வல்லவை - வல்லவர் சபையில் பேசும் போது, வாய் சோரார் - அச்சத்தால் பிழைபடச் சொல்ல மாட்டார்கள்.

(க-ரை) சொல்லின் தொகையெல்லாம் அறிந்த துrய்மையுடையவர்கள், வல்லவர்கள் நிறைந்த அவை, அல்லாதார் அவை என்னும் வகையினை யறிந்து அச்சத் தால் வழுப்படச் சொல்ல மாட்டார்கள்.

2. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார். 722

(ப-ரை) கற்றார்முன் - கற்றவர்கள் இருக்கும் அவை யில், கற்ற தாம் சுற்றவைகளை, செலச் சொல்லுவார் . கேட்பவர் மனம் ஏற்ப சொல்ல வல்லவர்கள், கற்றாருள் - கற்றவர்கள் எல்லாருள்ளும், கற்றார் . இவர் நன்கு கற்றவர், எனப்படுவர் - என்று உலக மக்களால் சொல்லப் படுவர்.

(க-ரை) கற்றவர்கள் இருக்கும் அவையில் (சபையில்) அஞ்சாமல் தாம் கற்றவற்றைச் சொல்ல வல்லாரைக் கற்றார் எல்லோரையும்விட இவர் நன்கு கற்றவர்' என்று உலகத்தார் சொல்லுவார்கள்.