பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 15

74. நாடு

(நாட்டின் இயல்புகளும் சிறப்பும்)

1. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்

செல்வரும் சேர்வது நாடு. 73 to

(ப-ரை) தள்ளா - குன்றாத, விளையுளும் - விளைவு செய்வோரும், தக்காரும் . அறப்பெரியோர்களும், தாழ்வு - கேடு, இலா - இல்லாத, செல்வரும் . செல்வமுடை யோரும், சேர்வது - ஒருங்கு வாழ்வதே, நாடு - நாடாகும்.

(க-ரை குறையாத விளைவு செய்வோரும், தக்க பெரியோர்களும் கேடில்லாத செல்வந்தர்களும் ஒருங்கு வாழ்வதே நாடாகும்.

2. பெரும்பொருளால் பெட்டக்கது ஆகிஅருங் கேட்டான்

ஆற்ற விளைவது நாடு. - 732

(ப.ரை பெரும் . அளவற்ற பொருளால் பொருளுடைமையால், பெட்டக்கதாகி. பிற தேயத்தாரும் விரும்பத்தக்கதாகி, அருங் கேட்டால்-கேடில்லாமையோடு பொருந்தி, ஆற்ற - மிக்க, விளைவது - விளைச்சலை யுடையதே, நாடு - நாடாகும்.

(கரை) அளவற்ற பொருளுடைமையால் பிற தேசத் தாரும் விரும்பத்தக்கதாகி கேடில்லாமையோடு கூடி மிக்க விளைச்சவினை யுடையதே நாடாகும்.

3. பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற் கு.

இறைஒருங்கு நேர்வது காடு. 733.

|ப-ரை பொறை - பிறநாடு பொறுத்த பார மெல்லாம், ஒருங்கு - ஒன்று சேர, மேல்வருங்கால் - தன்னிடம் வந்து சேரும் போது, தாங்கி . அவற்றைத் தாங்கிக் கொண்டு, இறைவற்கு - தன் மன்னருக்கு, இறை.