பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

(ப-ரை) இறைவன் - இறைவனது, பொருள்சேர் - மெய்ம்மை சேர்ந்த, புகழ் . புகழினை, புரிந்தார் மாட்டு - விரும்பின வரிடத்து, இருள் - அஞ்ஞானம் பற்றி, சேர் . வருகின்ற, இருவினையும் . நல்வினை தீவினையாகிய இரண்டும், சேரா - சேர்வதில்லை.

(கரை) அஞ்ஞானத்தினால் வருகின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த :புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிகின்றார் நீடுவாழ் வார். (ப. ரை) பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி யாகிய பொறிகள் ஐந்தின், வாயில் - வழியாக உடைய, ஐந்து - ஐந்து ஆசைகளையும், அவித்தான் - அறுத்தவ .ணுடைய, பொய்தீர்.பொய்யில்லாத (மெய்யான), ஒழுக்க. ஒழுக்கமான, நெறி . வழியில், நின்றார் - வழுவாது நின்ற வர்கள், நீடு - எக்காலத்திலும் ஒரு தன்மையராய், வாழ்வார் - வாழ்வார்கள்.

(க-ரை) மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து

பொறிகளின் வழியாக வரும் ஆசைகளை அறுத்தவ

.ணுடைய மெய்யான ஒழுக்க வழியில் நின்றவர்கள், எக்

காலத்திலும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள்.

7. தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு

மனக்கவலை மாற்றல் அரிது. (அல்லால் (ப-ரை) தனக்கு - தனக்கு, உவமை - ஒப்பு, இல்லா தான் - இல்லாதவனுடைய, தாள் - அடிகளை, சேர்ந் தார்க்கு-நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அல்லால். அல்லாமல், (பிறருக்கு) மனக்கவலை - மனக்கவலைகளை, கமாற்றல் - நீக்குதல் முடியாது.