பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

களும் உடையவரானாலும், பொருள் வைத்திருப்பவரை யாவரும் உயரச் செய்வர்.

3. பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று. 753.

|ப-ரை) பொருள் - பொருள், என்னும் . எனப்படு: ஒன்ற, பொய்யா - அணையாத, விளக்கம் - விளக்கமானது எண்ணிய - தன்னையுடையவர் நினைத்த, தேயத்து . தேசத்திற்கு, சென்று - சென்று, இருள் அறுக்கும் - பகை யென்னும் இருளினை அழிக்கும்.

(க.ரை பொருள் என்று கூறப்படுகின்ற பொய்யாத விளக்கானது தன்னை உடையவர்க்கு அவர் நினைத்த தேசத்திற்குச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும்.

4. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து

ததுஇன்றி வந்த பொருள். 754. tu-owl திறன் . பொருளீட்டும் நல்வழியினை, அறிந்து - தெரிந்து, தீது - கேடு, இன்றி - இல்லாதபடி, வந்த - உண்டான, பொருள். பொருள், அறன் - அறத். தினையும், ஈனும் தரும், இன்பமும் ஈனும் . இன்பத், தினையும் தருவதாகும்.

(கரை) செய்யும் திறனறிந்து நல்வழியில் உண்டான

பொருளானது அவனுக்கு அறத்தினையும் கொடுக்கும்: இன்பத்தினையும் கொடுக்கும்.

5. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல். 755.

(கரை அருளொடும் - அருள் நிறைந்த வழியாலும், அன்பொடும் - அன்பு நெறியாலும், வாரா பொருளாக்கம். வாராத பொருள் ஆக்கத்தினை, புல்லார் - பொருந்தாத வராகி, புரளவிடல் - விட்டு விடுதல் வேண்டும்.