பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

கையாகும், என்ப . என்று கூறுவர், ஒன்று - பகைவர்க்கு ஒரு தாழ்வு, உற்றக்கால் - வந்தபோது, ஊராண்மை இரக்கங் காட்டி உதவி செய்தல், அதன் எஃகு - அதற்குக் கூர்மை, யென்று கூறுவர்.

|க-ரை) பகைவர்மேல் கண்ணோடாமல் செய்யப்படும் வீரத்தினையே நூலோர், மிக்க ஆண்தன்மை என்று கூறுவர். பகைவர்க்கு ஒரு தாழ்வு வந்தபோது கண்ணோட்டம் செய்து அவர்க்கு உதவுகின்ற தன்மையினை, அந்த ஆண் தன்மைக்குக் கூtமை என்று கூறுவர் நூலோர்.

-4. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும். 774

(ப-ரை) கைவேல் - கைப் படையாகிய வேலினை, களிற்றொடு - தன்னை எதிர்த்து வந்த யானைமீது, போக்கி . செலுத்தி விட்டு, வருபவன் - வேறு வேல் தேடி வருகின்றவன், மெய் - தனது மார்பில் பாய்ந்திருந்த, வேல் - வேலைப் பார்த்து, பறியாநகும் . அதனைப் பறித்தெடுத்து மகிழ்வான்.

|க-ரை) கைப்படையான வேலினை, த ன் ைன எதிர்த்து வந்த யானைமீது எறிந்து, வருகின்ற யானைக்கு வேல் தேடுபவன் தனது மார்பினிடத்தே பாய்ந்திருந்த வேலைக் கண்டு அதனைப் பார்த்து மகிழ்வான்.

5, விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின்

ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. 775 (ப-ரை) விழித்த . (பகைவர் மேல் சினங்கொண்டு) பார்த்த, கண் - கண்கள், வேல் . வேலினை, கொண்டு - .பகைவர் வைத்துக் கொண்டு, எறிய தன்மீது எறிய, அழித்து . அதற்குப் பொறாமல் பார்வையினை அழித்து, :இமைப்பின் - கண் இமைக்குமானால், வன்கணவர்க்கு . ஆண்மை நிறைந்த வீரர்களுக்கு, ஒட்டன்றோ - புறங் கொடுத்தலாகுமல்லவா? - -