பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

347

10. விழையார் விழையப் படுப பழையார் கண்

பண்பின் தலைப்பிரியா தார். 810?? [ப-ரை பழையார் கண் - பழமையாய் வந்த நண்பர் கள், குற்றம் செய்தாலும் பண்பின் - நற்குணத்தில் (எப்போதும்) தலைப்பிரியாதார் - நீங்காதவர்கள், விழையார் . பகைவர்களாலும், விழையப்படுப விரும்பப் படுவார்கள்.

(க-ரை பழைமையாய் வந்த நண்பர்கள் பிழை செய்தாலும் தம் பண்பினால் அவர்களை விட்டு நீங்காத. வர்கள், பகைவர்களாலும் விரும்பப்படுவார்கள்.

82. தீ நட்பு (தீய குணமுடையவர்களுடைய நட்பு)

1. பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை

பெருகலின் குன்றல் இனிது. 8] 1

(ப-ரை) பருகுவார் - ஆவல் மிகுதியால் பருகுபவர், போலினும் . போன்றாராயினும், பண்பு - நற்குணம், இலார் - இல்லாதவருடைய, கேண்மை - நட்பு, பெருகலின் - வளர்வதைவிட, குன்றல் இனிது - தேய்தல் நல்லதாகும்.

(கரை) அன்பு மிகுதியால் நீரைப் பருகுவது போலப் பழகினாலும் தீய குணமுடையவர்களின் நட்பு வளர்வதை விடத் தேய்வதே நல்லதாகும்.

2. உறின்கட்டு அறின்ஒரூஉம் ஒப்பு:இலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என். 812 “ (ப-ரை) உறின் - பயனுள்ள போது நட்பினைச்செய்து, அறின் - பயனில்லாதபோது, ஒரூஉம் - நீங்கி"