பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

355

காலம், வருங்கால் .. வந்தபோது, முகம் நட்டு . அவரி களுடன் முகத்தினால் மட்டும் நட்பினைச் செய்து, அகம் . மனத்தினால், நட்பு - அவர்கள் நட்பினை, ஒரீஇ . நீக்கி, விடல் . முற்றிலும் விட்டு விடுதல் வேண்டும்.

(க-ரை) பகைவர்கள் தம்மிடம் நண்பராக நடந்து கொள்ளுகின்ற காலம் வந்தபோது அவர்களுடன் முகத் தினால் மட்டும் நட்பினைச் செய்து மனத்தினால் அவர்கள் நட்பினைத் தவிர்த்தல் வேண்டும்.

84. பேதைமை (அறிவிலிகளின் அறியாமைக் குணம்)

1. பேதைமை என்பது ஒன்று யாதெனின் ஏதங்கொண்டு

ஊதியம் போக விடல். 831

(ப-ரை| மேதைமை - அறியாத்தன்மை, என்பது - என்பது, ஒன்று - ஏனைய குற்றங்களைவிட மிக்க து ஒன்று, பாது . அது எது, எனின்.என்று கேட்டால், ஏதங்கொண்டு. தமக்குத் தீங்கு உண்டாக்குவதை மேற்கொண்டு, ஊதியம், ஆக்கம் தருகின்றவைகளை, போகவிடல் - விட்டு விடுவ தாகும்.

|க-ரை) பேதைமை என்று சொல்லப்படுவது எல்லாக் குற்றங்களிலும் மிக்கதாகும். அது யாதென்று கேட்டால், தமக்குக் கெடுதி உண்டாக்குவதைக் கைக்கொண்டு ஆக்கம் தருவதை விட்டு விடுவதாகும். 2. பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கண் செயல். 832 (ப-ரை) பேதைமையுள் * பேதைமைகளுக்குள், எல்லாம் . எல்லாம், பேதைமை - மிக்கதான பேதைமை,