பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

ஆர பயன் நிறையப் பெற, தமர் பசிப்பர் . தொடர்புள்ள சுற்றத்தார் பசித்திருப்பார்கள்.

|க-ரை) பேதையானவன் பெரிய செல்வத்தினைப் பெற்றுவிட்டால் தன்னோடு யாதொரு தொடர்பும் இல்லாதவர்கள் பயனடைவார்கள். எல்லாத் தொடர்பும் கொண்ட சுற்றத்தார் பசித்திருப்பர்.

8. மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

கைஒன்று உடைமை பெறின். 388

(ப. ரை) பேதை அறிவில்லாத பேதை, தன்கையில் . தனது கையில், ஒன்று . ஒன்றினை, உடைமை - உடைமை யாக, பெறின்-பெற்றால் (அது), மையல் பித்துப் பிடித்த, ஒருவன் . ஒருவன், களித்தற்று - மதுவினை உண்டது போன்றதாகும். -

(கரை) தன்னிடம் ஒன்றை உடையனாகப் பெற்றிருக் கும் பேதையானவன் மயக்கம் அடைவது எப்படிப்பட்ட தென்றால், முன்னேயே பித்துப் பிடித்தவன் மதுவுண்டு மயங்குவது போன்றதாகும்.

9. பெரிது.இனிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவது.ஒன்று இல். 839

(ப-ரை) பிரிவின் கண் - பிரியும் நேரம் வந்தபோது, தருவது - உண்டாவதாகிய, பீழை :- துன்பம், ஒன்று - என்பதொன்று, இல் இல்லையாதலினால், பேதையார் . அம்மூடாது, கேண்மை - நட்பு, பெரிது - மிகவும், இனிது . இனிமையானதாகும்.

(க-ரை) பிரிந்து போகின்ற காலம் வரும்போது துன்பம் தருவது ஒன்றும் இல்லையாதலால் பேதையானவர் களுடன் நட்புக் கொள்ளுதல் மிகவும் இனிமையான தாகும்.