பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

361

|க-ரை புல்லறிவுடைமை என்பது பாது என்று: கேட்டால், அது தம்மைத் தாமே யாம் நல்லறியுடை யோம்' என்று நன்கு மதித்துக் கொள்ளும் மயக்கமே யாகும்.

5. கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற

வலலது உம் ஐயம் தரும். 845. (ப-ரை) அல்லாத - தாம் கல்லாதவற்றையும், மேற். கொண்டு - கற்றவராக மேற்கொண்டு, ஒழுகல் - நடந்து கொள்ளுதல், கசடு - குற்றம், அற நீங்க, வல்லது உம் - கற்றிருக்கும் நூலிருக்குமேயானால், அதைப் பற்றியும்) ஐயம் தரும் . சந்தேகத்தினை மற்றவர்களுக்கு உண்டாக்கி’ விடும்.

(க-ரை புல்லறியுடையவர்கள் தாம் கற்றறியாத நூல்களையும் கற்றவர்களாகச் சொல்விக்கொண்டு நடத் தல், அவர்கள் குற்றமறக் கற்றதொரு நூலுண்டாயின், அதனிடத்தும் மற்றவர்களுக்கு ஐயத்தினை உண்டாக்கும்.

8. அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா வழி. 846 (ப-ரை) தம்வயின் - தம்மிடத்திலிருக்கும், குற்றம் - குற்றங் குறைகளை, மறையாவழி - நீக்காவிட்டால், அற்றம் - மறைக்க வேண்டிய உறுப்புக்களை, மறைத் தலோ - உடைகளினால் மறைத்து விட்டதாக எண்ணு வதும், புல் . கீழ்மையான, அறிவு . அறிவேயாகும்.

(க.ரை புல்லறிவாளர்கள் தம்மிடத்தில் நிகழும் குற்றங்களை நீக்காவிட்டால், ஆடைகளினால் மறைக்க வேண்டிய உறுப்புக்களை மறைத்தலும் அற்ப அறிவே யாகும்.

7. அருமறை சோரும் அறிவிலான் செய்யும் #பெருமிறை தானே தனக்கு. - 847 (ப-ரை அரு.அரிய, மறை-மறை மொழிப் பொருளை, சோரும் . மனத்திற் கொள்ளாமல் விட்டு விடுகின்ற,