பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

அறிவிலான் . புல்லறிவாளன், தானே தனக்கு - அவனே தனக்கு, பெரும்.மிகுந்த, இறை துன்பத்தினை, செய்யும். செய்து கொள்ளுவான்.

(கரை) பெறுதற்கரிய மறை மொழிப் பொருள் களைக் கற்றாலும், அதளை மனத்திற் கொள்ளாமல் போக்கும் புல்லறிவாளன், அறியாமையால் தனக்குத் தானே மிகுந்த வருத்தத்தினைச் செய்து கொள்ளுவான். 8. ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவும்.ஓர் கோய். - 848 (ப-ரை) ஏவவும் செய்கலான் . பிறர் சொன்னாலும் அறிந்து செய்யமாட்டான், தான் தேறான் - தானாகவும் தெரிந்து கொள்ள மாட்டான், அவ்வுயிர் போஒம் அளவும் . அவன் இறக்கும் காலம் வரை அக்குணம், ஒர்நோய் - ஓர் நோய் போல அவனிடம் இருக்கும்.

|கடரை) புல்லறிவாளன் அறிவுடையவர்கள் சொல் வியபடியும் செய்யமாட்டான். தானாகவும் செய்வன வற்றை அறியான். அவன் உயிர் நீங்கும்வரை இது அவனுக்கு ஒரு நோயாகும். 9. காணாதாற் காட்டுவான் தான்கானான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு. 849 (ப-ரை) காணாதான் . புல்லறிவால் அறியமாட்டாத வனுக்கு, காட்டுவான் - அறிவிக்கச் செல்லும் ஒருவன், தான் . அறிந்ததான், காணான் - அறிமாதவனாக முடிய நேரும், காணாதான் - அறியும் தன்மையில்லாத புல்லறி வாளன், தான் - அவன், கண்டவாறு கண்டறிந்தபடியே,

கண்டானாம் - அறிந்தவனென்று முடியும்.

(க-ரை) தன்னை எல்லாம் அறிந்தவனாக மதித்த லால் பிறர் அவனுக்கு அறிவிக்கப் புகுந்தால் அவனால் பழிக்கப்படுவதுடன் அப்படிச் சொல்லப் போனவன் ஒன்றும் அறியாதவனாக முடியும் . இனி அறியும் தன்மை இல்லாத அவன் தான் அறிந்தபடியே அறிந்தவனாகச்

செய்து கொள்ளுவான்.