பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

363

40. உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து

அலகையா வைக்கப் படும். 850 |ப-ரை) உலகத்தார் . உலகத்தில் உயர்ந்த பெரியோர், உண்டு . உண்டு, என்பது . என்று சொல்லப் படுகின்ற ஒன்றினை, இல் - இல்லை, என்பான் - என்று சொல்லுகின்ற ஒருவன், வையத்து - இந்த உலகில், அலகையா - ஒரு பேயாக, வைக்கப்படும் - கருதப்படுவான். |க.ரை உலகில் அறிந்தோர் பலரும் உண்டு என்ப தைப் புல்லறிவாளன் இல்லையென்று சொல்லுவான். அவன் மகன் என்று கருதப்படான். உலகில் சொல்லப் படுவதோர் பேய் என்று கருதப்படுவான்.

86. இகல் (பகைமை உள்ளத்தால் உண்டாகும் மனவேறுபாடு)

1. இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்

பண்புஇன்மை பாரிக்கும் நோய். 851 :ப-ரை எல்லா - எல்லா, உயிர்க்கும் - உயிர்களுக்கும். பகல் - பிற உயிர்களோடு சேராமை, என்னும் . என்கின்ற, பண்பின்மை - தீமையான குணத்தினை. பாரிக்கும் - வளர்க்கின்ற, நோய் - குற்றமானது, இகல் - மாறுபாடு, என்ப என்று நூல்வல்லார் கூறுவர்.

|க.ரை எல்லா உயிர்களுக்கும், மற்ற உயிர்களோடு சேராமை என்கின்ற தீக்குணத்தினை வளர்க்கின்ற குற்றத்தினை இகல் என்று சொல்லுவரி நூலோர்.

2. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

இன்னா செய்யாமை தலை. 852 |ப-ரை) பகல் - ஒன்று பட்டுக் கூடாமை, கருதி தினைத்து, பற்றா - வெறுப்பான செயல்களை, செயினும் . செய்தான் என்றாலும், இகல் மாறுபாட்டினை, கருதி தினைத்து, இன்னா - துன்பம் தரும் திமையினை, மற்ற