பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. பகைமாட்சி (அறிவின்மையால் பகையினை மாட்சிமைப் படுத்துதல்,

1. வ லியார்க்கு மாறுஏற்றல் ஒம்புக ஒம்பா

மெலி யார் மேல் மேக பகை, 861 (ப-ரை வலியார்க்கு தம்மைவிட வலிமை உள்ளவர் களுக்கு, மாறு - பகைமையாய், ஏற்றல் - நின்று எதிர்ப் பதை, ஒம்புக - நீக்குதல் வேண்டும், மெலியார் மேல் . மற்ற மெலியவர்கள் மேல், பகை - பகையாக இருப்பதை, ஒம்பா - நீக்காமல், மேக - விரும்புதல் வேண்டும்.

(க-ரை) தம்மைவிட வலிமையுடையவர்களிடத்தில் பகையாய் இருப்பதை நீக்குதல் வேண்டும். தம்மைவிட மெலியார்களுக்குப் பகையாய் இருப்பதை ஒழியாமல் விரும்புதல் வேண்டும்.

2. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு. - 86.2 (ப-ரை) அன்பு-கற்றத்தாரிடம் அன்பு, இலன் - இல்லாத வனாகவும், ஆன்ற - வலிமையான, துணையிலன் - துணையில்லாதவனாகவும், தான் - தானும், துவ்வான் - வலிமை இல்லாதவனாகவும், இருக்கும் ஒருவன்! ஏதிலான் - பகைவனுடைய, துப்பு - வலிமையினை, என் - எவ்வாறு, பரியும் . தொலைப்பவனாவான்.

(கரை) ஒருவன், தனது சுற்றத்தின் மீது அன்பில்லா மலும், வலிமையான துணையில்லாமலும், தானும் வலிமை பில்லாமலும் இருப்பானாகில் தன்மீது வந்த பகைவன் வலியினை எவ்வாறு தொலைப்பான்?

3. அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு. 863

(புரை, அஞ்சும் - அஞ்ச வேண்டாதபோது அஞ்க பவன், அறியான் - அறியாமையுள்ளவன், அமைவு -