பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373

இரண்டாக இருந்தால் ஒருவனாக இருக்கும் தான் அப்பல்ை இரண்டினுள் பொருத்தமான ஒன்றினை அப்போதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்ளுதல் வேண்டும். 8. தேறினும் தேறா விடினும் அழிவின்கண்

தேறான் பகாஅன் விடல், - 876 (ப-ரை) தேறினும் - பகைவன் முன்பு தெளியப்பட்ட வனானாலும், தேறாவிடினும் . தெளியப்படாதவனா னாலும், அழிவின் கண் - தனக்குத் தாழ்வு வந்துற்ற போது, தேறான். அவனுடன் கூடாதவனாயும், பகா அன்விடல் . பகைத்து நீங்காமலும் நடுவாக விட்டு வைத்திருத்தல் வேண்டும்.

(கரை) பகைவனை முன்பு தெளிந்து அறிந்து இருந் தாலும் அல்லது தெளிந்து அறியாமல் இருந்தாலும் தனக்கு அழிவு வந்துற்றபோது அப்பகைவனைக் கூடாமலும், நீக்கிவைக்காமலும் இடையே விட்டுவைக்க வேண்டும்,

7. கோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க

மென்மை பகைவர் அகத்து. 877 (ப-ரை) நொந்தது அறியார்க்கு - தான் நொந்து, இருப்பதனை அறிந்திராதவர்களுக்கு, நோவற்க - தனது துன்பத்தினைச் சொல்லாதிருத்தல் வேண்டும், மென்மை . வலிமையில்லாத் தன்மையினை, பகைவர் அகத்து. அதனை எதிர் நோக்கியிருக்கும் பகைவரிடத்தில், மேவற்க - ம்ே லிட்டுத் தெரியப் படுத்தாதிருத்தல் வேண்டும்.

(க-ரை) தான் நொந்திருப்பதனைத் தாமாக அறியா தவர்களுக்குச் சொல்லா திருத்தல் வேண்டும். தனது மென்மையினைப் பார்த்திருக்கும் பகைவரிடத்தில் மேலிட்டுத் தெரியப்படுத்தாதிருத்தல் வேண்டும்.

8. வகைஅறிந்து தன்செய்து தன்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு. w." 878 (ப-ரை) வகை - தொழிலினைச் செய்யும் வகையினை, அறிந்து - தெரிந்து, தன் செய்து தன்னைப் பெருக்கிக்