பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

393

5. கையறியாமை உடைத்தே பொருள் கொடுத்து

மெய்யறி யாமை கொளல். . 925;

(ப-ரை பொருள் - விலைப் பொருளினைக் கொடுத்து, மெய் . தன்னைத்தானே, அறியாமை. மறந்து விடுதலைத. கொளல் - கொள்ளுதல், கையறியாமை - செய்வது இன்ன தென்றே அறியாமையினை, உடைத்து உடையதால் வந்த செயலாகும்.

|க-ரை) பொருள் கொடுத்து ஒருவன் கள்ளினால் தனக்கு மெய் மறப்பினைத் தேடிக் கொள்ளுதல், செய்வது: இன்னது என்ற அறியாமையினைக் காரணமாகக் கொண்டதாகும். * ,

8. துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள் உண் பவர். r 926.

(ப-ரை) துஞ்சினார் - தூங்கியவர்கள், செத்தாரின் - இறந்து போனவரின், (அப்போதைக்கு) வேறு . வேறு, அல்லர் - என்பவராக மாட்டார், கள் - கள்ளினை, உண்ப வர் - குடிப்பவர், எஞ்ஞான்றும் - எக்காலத்திலும், நஞ்சு - நஞ்சினை, உண்பார் - உண்பவரினும் வேறாகக் கருதப் படார். х

|கடரை உறங்கினவர்கள் அந்த நேரத்தில் செத்தாரின் வேறாகக் கருதப்பட மாட்டார்கள். அதுபோலக் கள்ளுண்போர் நஞ்சு உண்பவரினின்றும் வேறாகக் கருதப் பட மாட்டார்கள். - 7. உள்ஒற்றி உள்ளுர் கப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ஒற்றிக் கண்சாய் பவர். 927' |ப-ரை, கள் - கள்ளினை, ஒற்றி - மறைத்துக் குடித்து, கண் . அக்களிப்பினால் அறிவு, சாய்பவர் . தளர்பவர், உள்ளுர் - உள்ளூரில் வாழ்பவரால், உள்ளொற்றி . உள்ளே நடப்பது தெரிந்து கொள்ளப்பட்டு, எஞ்ஞான்றும் - எப்போதும், நகப்படுவர் . நகுதல் செய்யப் படுவர்.