பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழிபு இயல்

96. குடிமை

(உயர்ந்த நற்குடியில் பிறந்தாரது தன்மைகள்)

1. இற்பிறந்தார் கண்ணல்லது இல்லை இயல்பாக

செப்பமும் காணும் ஒருங்கு. 951

|ப-ரை செப்பமும் - நடுவு நிலைமையாகிய தன்மை யும், நானும் - நாணம் என்பதும், ஒழுங்கு - ஒன்று சேர்ந்து, இற் பிறந்தார் கண் - உயர்ந்த குடியில் பிறந்த வர்களிடம், அல்லது - அல்லாமல், இயல்பாக - இயற்கை யாகவே, இல்லை . மற்றவர்களிடம் உண்டாகாது.

|கடரை நடுவு நிலைமையாகிய தன்மையும், நாணம் என்பதும் ஒன்று சேர்ந்து, உயர்ந்த குடியில் பிறந்தார் களிடம் அல்லாமல் மற்றவர்களிடம் இயற்கையாகவே உண்டாகாது.

2. ஒழுக்கமும் வாய்மையும் காணும் இம்மூன்றும்

இழுக்கார் குடிப்பிறக் தார். 952 (ப-ரை குடி - உயர்ந்த குடியின் கண் , பிறந்தார். பிறந்த பெரியோர்கள், ஒழுக்கமும் - நல்லொழுக்கமும், வாய்மையும் . மெய்ம்மையும், நாணமும் . நாணமும்; எனப்பட்ட இம்மூன்றும் - இந்த மூன்று தன்மை களிலும், இழுக்கார் - தவறமாட்டார்கள்.

|ப-ரை) ஒழுக்கமும் வாய்மையும் நானும் ஆகிய இம்மூன்றினிடத்தும் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் தாமாகவே வழுவ மாட்டார்கள்.