பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

409

3. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு. 963.

ப-ரை பெருக்கத்து - நற்குடிப் பிறந்தார்க்கு, நிறைந்த செல்வம் உண்டான போது, பணிதல் வேண்டும் - யாவரிடத்தும் பணிவு வேண்டும், சிறிய . குறைந்த, சுருக்கத்து - செல்வம் சுருங்கி வறுமையுண்டான போது, உயர்வு வேண்டும்-உயர்ச்சியான தன்மை வேண்டுவதாகும்.

(கரை) நற்குடியில் பிறந்தார்க்கு நிறைந்த செல்வம் உண்டானபோது யாவரிடத்தும் பணிவு வேண்டும். செல்வம் குறைந்து வறுமையுண்டான போது உயர்ச்சி வேண்டுவதாகும்.

4. தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை. 964:

(ப-ரை) மாந்தர் - நற்குடியில் பிறந்த மாந்தர், நிலையின் உயர்வான தமது நிலையிலிருந்து, இழிந்தக் கடை - தாழ்ந்து விட்ட போது, தலையின்.தலையிலிருந்து, இழிந்த வீழ்ந்த, மயிர் - மயிரினை, அனையர் - ஒப்பவராவர்.

(க-ரை நற்குடியில் பிறந்த மக்கள் தம்முடைய உயர்ந்த நிலையைவிட்டுத் தாழ்ந்தபோது தலையைவிட்டு நீங்கி வீழ்ந்த மயிரினை ஒப்பர்.

5. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின். 963 :ப-ரை) குன்றின் குன்றினை, அனையாரும்-போன்று: உயர்ந்தோரும், குன்றி . குன்றிமணி, அனைய அளவின தாக, குன்றுவ - தாழ்தற்குக் காரணமான செயல்களை, செயின் - செய்தாலும், குன்றுவர் - தாழ்ந்து விடுவார்கள். (கரை) குடிப்பிறப்பால் குன்றினைப் போல் உயர்ந் தோரும் தாழ்தற்குக் காரணமான செயல்களை ஒரு குன்றி. மணி அளவு செய்வாராயின் தாழ்ந்துவிடுவர். -