பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

2. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்குஇல்லை கேடு. (ப-ரை)அறத்தின் - அறத்தினைவிட, ஊங்கு - மேலான, ஆக்கமும் . செல்வமும், இல்லை - இல்லையாகும், அதனை. அந்த அறத்தினை, மறத்தலின் - மறப்பதைவிட, ஊங்குபெரிய, கேடு இல்லை . தீங்கு இல்லையாகும்.

(கரை) அறம் செய்வதைவிட மேம்பட்ட செல்வமும் இல்லை; அந்த அறத்தினை அஞ்ஞானத்தால் மறப்பதை விடப்பெரிய தீமை யும் இல்லை.

3. ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே

செல்லும்வாய் எல்லாம் செயல். (ப-ரை) ஒல்லும்-தம்மால் முடியக் கூடிய, வகையான். வழிகளில் எல்லாம், அறவினை - அறமான செயல்களை, ஒவாதே - எப்போதும், (நிறுத்தாமல்) செல்லும் - செல்லக் கூடிய, வாய் - இடங்களில், எல்லாம் - எல்லாம், செயல். செய்தல் வேண்டும்.

(க-ரை) தம்மால் முடியக்கூடிய வழிகளால் இடை விடாமல் செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் அறத்தினைச் செய்தல் வேண்டும்.

4. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல ரே பிற. (ப-ரை மனத்துக்கண் - மனத்தில், மாசு - குற்றம், *iஅழுக்கு) இலனாதல் - இல்லாதவனாக இருக்க வேண்டும் அறம். அறம் என்பது, அனைத்து.அவ்வளவேயாகும், பிறஅதுவல்லாமல் செய்யப்படுவன யாவும், ஆகுல - ஆரவாரம் "என்னும், நீர தன்மையுடையனவாகும்.

(கரை) மனத்தில் குற்றமில்லாமல் இருத்தல் வேண்டும். அறம் என்பது அதுவேயாகும், அறம் அவ்வளவேதான்; அது வல்லாமல் செய்யப்படுவன யாவும் ஆரவாரம் என்னும் .தன்மையுடையனவாகும்.