பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

429

(கரை) நன்மக்களுடைய நாணம் என்பதாவது இழிந்த செயல்கள் செய்ய நாணுதலாகும். அப்படி இன்றி மன்ம் மொழி மெய்கள் ஆகின்ற பிற அடக்கத்தினால் வரு கின்ற நாணம் என்றால் அது அழகிய நுதலினையுடைய குலமகளிர் நாண வேண்டிய தன்மைகள் ஆகும். :

2. ஊண்உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறல்ல

காண் உடைமை மாந்தர் சிறப்பு. 1012

(ப-ர்ை ஊண் - உண்ணும் உணவும், உடையும் . உடையும், எச்சம் . மற்றவைகளும் உயிர்க்கெல்லாம் . எல்லா உயிரினங்களுக்கும், வேறு - வேறானதாக, அல்ல . அல்லவாம் பொதுவாக அமைந்திருப்பனவாகும்) மாந்தர். தன்மக்களுக்கு, சிறப்பு - சிறப்பாக இருக்க வேண்டியது (என்னவென்றால்) நாணுடைமை - நாணம் உடைமை என்பதேயாகும். ".

|க-ரை) உணவும் உடையும் மற்றவைகளும் எல்லா உயிர்களுக்கும் பொதுவேயாகும். நன்மக்களுக்குச் சிறப் பா ன து நாணமுடைமையேயாகும்; மற்றவையல்ல என்பதாம். -

3. ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண் என்னும்

கன்மை குறித்தது. சால்பு. 1012

ப-ரை உயிர் . உயிரினங்கள், எல்லாம். எல்லாம், ஊனைக்குறித்த - உடம்பினை இருப்பிடமாகக் கொண்டு அதனை விடாமல் இருக்கின்றன, சால்பு நிறைகுணம் என்னும் சான்றாண்மை, நாண் நாணம், என்னும் . என்கின்ற, நன்மை - நற்குணத்தினை, குறித்தது - தனக்கு இருப்பிடமாகக் கொண்டிருப்பதாகும். ",

(க-ரை எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதை விடாதிருப்பனவாகும். அதுபோல சால்பு என்ற உயர்ந்த தன்மை நாணம் என்பதனை நிலைக்களனாகக் கொண்டு அதனைவிடர்து,