பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

435

6. நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

இல்லாண்மை ஆக்கிக் கொளல். . 1026

(ப-ரை) ஒருவற்கு - ஒருவனுக்கு, நல்.நல்ல, ஆண்மை. ஆண்மைத்தன்மை, என்பது - என்று உயர்த்திச் சொலலப் படுவது, (எதுவென்றால்) தான் தான், பிறந்த - பிறந்துள்ள, இல்லாண்மை - குடிமக்களைத் தன் வசப் படுத்தி ஆளும் தன்மையினை, ஆக்கிக் கொளல் . தனக்கு உள்ளதாக ஆக்கிக் கொள்ளுதலாகும்.

(க-ரை ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று உயர்த்திச் சொல்லப்படுவது எதுவென்றால் தான் பிறந்த குடியிலுள்ள மக்களைத் தன்வயப்படுத்தி ஆளும் தன்மையினைத் தனக்கு உள்ளதாக்கிக் கொள்ளுதலாகும்.

7. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்

ஆற்றுவார் மேற்றே பொறை. 102.

(ப-ரை அமரகத்து - போர்க்களத்தில் (போரினைத் தாங்கி நடத்துதல்) வன்கண்ணர்போல . வீரம் மிகுந்தவர் மேல் ஆகுதல் போல, தமரகத்தும் - குடியின் கண்ணும், பொறை-அதனைத் தாங்குதல் (பலருள்ளும்), ஆற்றுவார் - தாங்கி நடத்த வல்லவர், மேற்றே மேலதேயாகும்.

(கரை) போர்க்களத்திற்குச் சென்றவர்களில் போரை தாங்கும் தன்மை, மிகுந்த வீரம் செறிந்தவர் மேலாகுதல் போலக் குடியில் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் தாங்குதல் வல்லவர் மேலதாம். -

8. குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும். - 1028

|பகரை மடி - சோம்பலினை, செய்து - செய்து கொண்டு, மானம் - மானத்தினையும், கருத - நினைத்துக் கொண்டு, (இருப்பாரானால்) கெடும் - குடி கெட்டு விடும்.